Home Featured உலகம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மனைவி-குழந்தைகளைக் கொல்ல வேண்டும் – அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேச்சால் சர்ச்சை!

ஐ.எஸ். தீவிரவாதிகளின் மனைவி-குழந்தைகளைக் கொல்ல வேண்டும் – அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேச்சால் சர்ச்சை!

491
0
SHARE
Ad

donald_trumpநியூயார்க் – ஐஎஸ் அமைப்புடன் போரிடு வதற்கு, தீவிரவாதிகளை கடுமையாக சித்ரவதை செய்வதுடன், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொல்லவேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப் படுவதற்கான தேர்தலில் களமிறங்கியுள்ளார் டொனால்டு டிரம்ப். இவர் அதிரடியாக கருத்துக் கூறுவது போன்று, பெரும் சர்ச்சைக்குரியவற்றை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, தண்ணீரைக் கொண்டு சித்ரவதை செய்யும் ‘வாட்டர்போர்டிங்’ முறைக்கு ஆதரவு தெரிவித்த அவர், தீவிரவாதிகள் நம்மிடம் விளையாடும் அதே முறையை நாமும் கையாள வேண்டும்.

#TamilSchoolmychoice

தீவிரவாதிகளை கடுமையாக சித்ரவதை செய்ய வேண்டும். அவர்களின் மனைவி, குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள், குற்றவாளிகளை மிகக் கொடூரமான முறையில் விசாரிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செயல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை விமர்சித்த டிரம்ப், நான் அதிபராகத் தேர்வானால் சட்டங்களை வலுப்படுத்துவேன். நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். அதனால்தான் நம்மால் ஐஎஸ் அமைப்பை வெற்றிகொள்ள முடியவில்லை. நாம் மிக மென்மையாக கையாள்கிறோம், அவர்களோ (தீவிரவாதிகள்) எந்த கட்டுப்பாடும் அற்றவர்கள். காட்டுமிராண்டிகள். அவர்களை கடும் சித்ரவதை செய்ய வேண்டும்” என்றார்.

முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக்கேல் ஜோர்டான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யார் எந்த உத்தரவைப் பிறப்பித்தாலும் அனைத்துலக விதிமுறைகளை மீறி அமெரிக்க ராணுவத்தினர் செயல்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்ப், “அதிபராக நான் உத்தரவு பிறப்பித்தால், ராணுவ அதிகாரிகள் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். என்னை நம்புங்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சிஐஏ துணை இயக்குநர், மைக் மோரல் ‘வாட்டர் போர்டிங்’ (வாயைத் துணியால் கட்டி நீரை ஊற்றுவது. இதனால், நீரில் மூழ்குவது போன்ற துயரத்தை அனுபவிக்க நேரிடும்) போன்ற சித்ரவதைகளால் விசாரணையில் பயன் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலை யில், அவரின் பிரச்சாரக் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “அமெரிக்க அதிபராக சர்வதேச உடன்படிக்கைகளை, சட்டங்களை பின்பற்றுவார். ராணுவம் அல்லது இதர அதிகாரி கள் சட்டத்தை மீறும்வகையில் உத்தரவிடமாட்டார்” என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.