கோலாலம்பூர் – மலேசியர்களின் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று வரும் ஒலாபோலா திரைப்படம் வெளியிடப்பட்டு 39 நாட்களுக்குப் பிறகு, திரையரங்குகளில் 16 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஆஸ்ட்ரோ ஷா, கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் மற்றும் மல்டிமீடியா என்டர்டெய்ன்மெண்ட் செண்ட்ரியான் பெர்ஹாட் தயாரிப்பில், கடந்த ஜனவரி 28-ஆம் தேதி உள்ளூர் திரையரங்களில் ஒலா போலா திரைப்படம் வெளியீடு கண்டது.
இயக்குனர் சியு கேங் குவான் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் 80-ஆம் ஆண்டுகளில், மலேசியாவின் தேசிய காற்பந்து அணி, காற்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும், அதிலிருந்து மீண்டு அவர்கள் வெற்றியைத் தேடி போராடும் அணியின் ஒற்றுமையையும் சித்தரிக்கும் கதையாகும்.
இந்நிலையில், இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி மற்றும் 17-ம் தேதி, தைப்பே கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விருது விழாவில் திரையிடப்பட்டு அனைத்துலக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு www.facebook.com/astroshaw மற்றும் www.olabola.tv அகப்பக்கங்களை நாடலாம்.