Home Featured கலையுலகம் அரசாங்க ஊக்கத்தொகை மூலமாக ‘ஒலாபோலா’ கூடுதலாக 5 லட்சம் வசூல் செய்கிறது!

அரசாங்க ஊக்கத்தொகை மூலமாக ‘ஒலாபோலா’ கூடுதலாக 5 லட்சம் வசூல் செய்கிறது!

742
0
SHARE
Ad

OlaBola-Poster-

கோலாலம்பூர் – தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) மூலமாக உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தேசியத் திரைப்பட வளர்ச்சிக்கும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத் தொகைகளையும் வழங்கவுள்ளது அரசாங்கம்.

தற்போதைக்கு, சிஎம்பிசி (Content Malaysia Pitching Centre) மூலமாக திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு நிதி வழங்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறையின் துணையமைச்சர் டத்தோ ஜைலானி ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒற்றுமை, நாட்டுப்பற்று, நாட்டின் மீதான காதல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களுக்கு, சிம்பிபிசி மூலமாக நிதிவழங்கப்படும்” என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ஜசெக கோத்தா மெலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதிலளித்த ஜைலானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசிய காற்பந்தாட்டக் குழுவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஒலாபோலா’ திரைப்படத்திற்கு, அரசாங்கத்தின் முழுநீளத் திரைப்படத்திற்கான ஊக்கத்தொகை (Incentive Feature Film ) கிடைத்துள்ளது. அதாவது அதன் மொத்த டிக்கெட் விற்பனையிலான வரிச்சலுகையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஐடிஎப்சி என்பது உள்ளூர் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு அரசாங்க முன்னெடுத்திருக்கும் ஒரு திட்டமாகும். இதன் மூலமாக உள்ளூர் படத் தயாரிப்பாளர்கள் இன்னும் தரமான படங்களை உருவாக்க இந்த நிதி உதவும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இச்சலுகை மூலமாக  அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் (RM500,000) வரை ஒலாபோலாவிற்குக் கூடுதல் வசூல் கிடைக்கவுள்ளதாகவும் டத்தோ ஜைலானி ஜோஹாரி அறிவித்துள்ளார்.

கட்டாயத் திரையிடல் திட்டம் மூலமாக (வாஜிப் தாயாங்), மே மாதம் வரையில் ‘ஒலாபோலா’ 15.8 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஐடிஎப்சி-க்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அப்படம் எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தால், அதிக பட்சமாக 500,000 ரிங்கிட் வரையில் தள்ளுபடி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அண்மையில் வெளியாகி மலேசியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற ‘ஜகாட்’ திரைப்படத்திற்கும் பினாஸ் நிதியுதவி வழங்கவுள்ளதாக அதன் தயாரிப்புத் தரப்பில் இருந்து செல்லியலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.