Home Featured இந்தியா நேதாஜி போர் குற்றவாளி அல்ல – புதிய ஆவணங்கள் மூலம் நிரூபணம்!

நேதாஜி போர் குற்றவாளி அல்ல – புதிய ஆவணங்கள் மூலம் நிரூபணம்!

1051
0
SHARE
Ad

netajiபுதுடில்லி – நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான புதிய ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. அவர் கடந்த 1945-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகவும், இந்தியாவில் மாறுவேடத்தில் அவர் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுத்தது.

#TamilSchoolmychoice

இதன்படி கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜியின் பிறந்த நாளன்று, அவர் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை மோடி வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 50 ஆவணங்களும், ஏப்ரல் மாதம் 25 ஆவணங்களும் என மூன்று கட்டங்களாக 175 ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த 1968 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நேதாஜி தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை இணையதளத்தில் மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இந்த ஆவணங்களில் 5 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தாலும், 4 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தாலும், 16 ஆவணங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தாலும் பாதுகாக்கப்பட்டு வந்தவை.

இந்த ஆவணங்கள் மூலம் நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.