Home Featured கலையுலகம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா!

இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா!

736
0
SHARE
Ad

Atharva-In-Mani-Ratnam-Filmசென்னை – இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ‘கடல்’ தோல்வியிலிருந்து மணிரத்னத்தை ‘ஓ காதல் கண்மணி’ மீட்டுக்கொண்டு வந்தது.

‘ஓ காதல் கண்மணிக்கு’ பின் தற்போது கார்த்தி, சாய் பல்லவியை வைத்து தனது அடுத்த படத்தை மணி எடுக்கவுள்ளார். இந்நிலையில் இவரின் அடுத்த பட நாயகனாக அதர்வா நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து தடுமாறி வந்த அதர்வாவுக்கு ஈட்டி, கணிதன் 2 படங்களும் அடுத்தடுத்து வெற்றியைக் கொடுத்துள்ளன. இதனால் அதர்வாவின் மதிப்பு தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில் தான் அதர்வாவை மணிரத்னம் இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் ஒரு நேரடி கன்னடப் படத்தை இயக்கப் போவதாக மணி தெரிவித்திருந்தார்.

இதனால் தமிழ், கன்னடம் 2 மொழிகளிலும் அதர்வாவை வைத்து அவர் படம் எடுக்கப் போவதாக கூறுகின்றனர். ஆனால் இதனை வெறும் வதந்தி என்றும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஏனெனில் மணிரத்னம் இயக்குநராக அறிமுகமானது முரளியின் பகல் நிலவு மூலமாகத் தான். இதனால் வதந்தியானது உண்மையாக மாறும் வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. எனினும் நாம் வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்.