Home Featured உலகம் இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்களே – டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!

இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்களே – டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!

698
0
SHARE
Ad

donald-trumpவாஷிங்டன் – ‘பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள் தான்’ என அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியாளர்  டொனால்ட் டிரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

‘இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள்’ என ஏற்கனவே அவர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், மயாமியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

அப்போது டிரம்ப் அளித்த பதிலில், ‘அமெரிக்காவில் வசிக்கும் 16 லட்சம் இஸ்லாமியர்களையும் நான் குறை கூறவில்லை. ஆனால், பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள் தான் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான மசூதிகளில், அமெரிக்காவின் மரணத்தை வேண்டி தான் பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்றார்.
அதே போல, இந்தியர்கள் அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக கூறி வரும் டிரம்ப், ‘நான் அதிபரானால், இந்திர்களிடமிருந்து வேலைவாய்ப்பை பறித்து அமெரிக்கர்களுக்கு தருவேன்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்திய சாப்ட்வேர் ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எச் 1பி விசா பற்றி டிரம்ப்பிடம் கேள்வி கேட்டது. அதற்கு அவர், ‘எச்1பி விசா பற்றி நன்கு அறிவேன்.

ஒரு தொழிலதிபராகவே நானே அந்த விசாவை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், எச்1பி விசாவை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இது நமது ஊழியர்களுக்கும், நமது தொழிலுக்கும் எதிரானது. இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதற்கு சமம். எனவே எச்1பி விசாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.