Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது – குஷ்பு!

விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது – குஷ்பு!

599
0
SHARE
Ad

kushboo-congress-600புதுடெல்லி – தனித்து போட்டி என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருப்பது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று குஷ்பு கூறினார். நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் குறித்து விளக்கினேன். தேர்தலை சந்திப்பதற்கான செயல் திட்டங்களை எடுத்துக்கூறினேன்.

தமிழக காங்கிரஸ் இந்த தேர்தலில் தகுதி அடிப்படையில் போட்டியிடுவதற்கான சீட்டுகளை வழங்கும். கோட்டா முறை கண்டிப்பாக இருக்காது என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியிருக்கிறார். அதேபோல கோஷ்டி மனப்பான்மையுடன் காங்கிரஸ் இயங்காது. தகுதி அடிப்படையில்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

தேர்தல் கூட்டணி பற்றி தே.மு.தி.க. தலைவர் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கோ தி.மு.க.வுக்கோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் எங்கள் கூட்டணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவர் தனியாக போட்டியிடுகிறோம் என்று அறிவித்து விட்டார். இதில் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் கிடையாது.

அவருடைய கட்சியினருடன் கலந்து ஆலோசித்துத்தான் இந்த முடிவை அவர் எடுத்துஇருப்பார். சக நடிகராகத்தான் அவரை எனக்கு தெரியும். அரசியல் தலைவராக அவருடன் நான் பேசியது கிடையாது என அவர் கூறினார்.