Home Featured நாடு ‘மக்கள் பிரகடனம்’ மகாதீரின் சொந்த நோக்கம் – நஜிப் கருத்து!

‘மக்கள் பிரகடனம்’ மகாதீரின் சொந்த நோக்கம் – நஜிப் கருத்து!

538
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கூச்சிங் – ‘மக்கள் பிரகடனம்’ என்பது மகாதீரின் சொந்த நோக்கம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விமர்சித்துள்ளார்.

மகாதீர் தலைமையிலான அந்தப் பிரகடனம் கிழக்கு மலேசியாவில் பிரதிநிதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள நஜிப், ‘மக்கள்’ பிரகடனம் என அதற்குப் பெயரிட்டுள்ளது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மக்கள் பிரகடனம் என்று கூறி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றும், தனிப்பட்ட நோக்கத்தை மக்கள் நோக்கமாகத் திணிக்க வேண்டாம் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

அந்தப் பிரகடனத்தை கண்டுகொள்ளவோ, எழுதவோ, ஏற்றுக் கொள்ளவோ மக்கள் இன்னும் முன்வரவில்லை என்று கூறும் நஜிப், சரவாக்கில் பெருமளவிலான மக்கள் நடந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூச்சிங் வாடர்பிரண்ட்டில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.