Home Featured கலையுலகம் தெறி இசை வெளியீட்டு விழாவில் ரஜினியா?

தெறி இசை வெளியீட்டு விழாவில் ரஜினியா?

617
0
SHARE
Ad

vijay-theri-in-rajinis-kabali-wayசென்னை – விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் பாடல்களின் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தையும், விஜய்யின் ‘தெறி’ படத்தையும் கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். ஆதலால் ரஜினி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தெறி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா மகள் நைனிகா நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.