Home Featured தமிழ் நாடு விசாரணையை இழுத்தடிக்க ஜெயலலிதா எதையும் செய்வார் – வழக்கறிஞர் ஆச்சார்யா அதிரடி!

விசாரணையை இழுத்தடிக்க ஜெயலலிதா எதையும் செய்வார் – வழக்கறிஞர் ஆச்சார்யா அதிரடி!

530
0
SHARE
Ad

jayalalitha-acharyaபுதுடெல்லி – வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதையும் செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 23-ஆம் தேதியன்றும் ஜெயலலிதா தரப்பு மேலும் ஒரு வார காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய பெஞ்ச் இக்கோரிக்கையை நிராகரித்து கர்நாடகா அரசு தரப்பு இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் 2-வது நாள் வாதத்தை நிறைவு செய்த போது, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மார்ச் 10-ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையில் தவே, தம்முடைய இறுதிவாதத்தை நிறைவு செய்தார். தவே தம்முடைய வாதத்தில் பெங்களூரு விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவிக்கப்பட்டது எப்படி என்பதை விரிவாக தம்முடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) கண்ணைமூடிக் கொண்டு அந்த தீர்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதை கூட தெரிவிக்காமல் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை பிழையாக மதிப்பிட்டு விடுதலை செய்திருக்கிறார் என விவரித்திருந்தார்.

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு வைக்கப்பட்டது. வழக்கில் ஆஜரானார் ஆச்சார்யா இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.

அவர் தம்முடைய வாதத்தின் தொடக்கத்திலேயே, இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக எதையும் ஜெயலலிதா செய்வார். அவர் 2 முறை முதல்வராக இருந்த காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் 76 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.