Home நாடு பாலாவின் முதல் சத்தியப்பிரமாணத்தில் பணப்பரிமாற்றங்கள் எதுவும் நிகழவில்லை – அமெரிக் சிடு

பாலாவின் முதல் சத்தியப்பிரமாணத்தில் பணப்பரிமாற்றங்கள் எதுவும் நிகழவில்லை – அமெரிக் சிடு

616
0
SHARE
Ad

balasubramaniamபெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்தில் பிரதமர் நஜிப்பை சம்பந்தப்படுத்தி, சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்ய தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்திற்கு 7 லட்சம் வெள்ளி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் உறுதியளித்தார் என்று  ராஜா பெட்ரா கமாருதின் தனது வலைத் தளத்தில் பதிவு செய்திருந்ததை மறுத்து நேற்று பாலாவின் வழக்கறிஞர் அமெரிக் சிடு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவ்வறிக்கையில், பாலாவிற்கு பணம் கொடுத்தது தொழிலதிபர் தீபக் ஜெய்கிஷான் என்றும், அப்பணம் பாலா தனது முதல் சத்தியப் பிரமாணத்தை மறுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி பதிவு செய்த இரண்டாவது சத்தியப் பிரமாணத்திற்காக வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலா, இவ்வழக்கு தொடர்பான பல உண்மைகளை வெளியே கொண்டு வர முடியாத அளவிற்கு மறைமுகமாக அவருக்கு பல நெருக்கடிகள் அப்போது இருந்ததாகவும், அவர்களால் தான் பாலா இது போன்ற அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளார் என்றும் அமெரிக் சிடு குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அமெரிக் சிடுவின் கூற்றுப்படி, 2008 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட பாலாவின் முதல் சத்தியப் பிரமாணத்தில், எந்தவித பணப் பரிமாற்றங்களும் நிகழவில்லை என்பது ராஜா பெட்ரா கமாருதினுக்கு நன்றாகத் தெரியும். அதுவே உண்மையும் கூட என்கிறார்.

தனக்கு யாரும் பணம் தருவதாக வாக்களிக்கவில்லை, தானும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பாலா ஏற்கனவே கூறியிருந்தார். அவருடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இப்போது அவரது வழக்கறிஞர் அறிக்கை விடுத்துள்ளார்.