Home Featured இந்தியா விஜய் மல்லைய்யாவை பிடித்துத் தந்தால் ரூ. 10 லட்சம் – உத்திரபிரதேச காங்கிரஸார் அறிவிப்பு!

விஜய் மல்லைய்யாவை பிடித்துத் தந்தால் ரூ. 10 லட்சம் – உத்திரபிரதேச காங்கிரஸார் அறிவிப்பு!

628
0
SHARE
Ad

vijay-mallyaலக்னோ – தலைமறைவாகி விட்ட தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் தலைக்கு உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸார் ரூ. 10 லட்சம் விலை வைத்துள்ளனர்.

அவரை யார் பிடித்துத் தந்தாலும் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் தரப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் அலகாபாத் முழுவதும் இதுதொடர்பான சுவரொட்டிகள், தட்டிகளையும் அவர்கள் வைத்துள்ளனர். மல்லைய்யாவை கொள்ளையன் என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.

மல்லைய்யா நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல பிரதமர் மோடிதான் காரணம் என்றும் காங்கிரஸார் விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து பேசி வந்தார். ஆனால் மல்லைய்யா போன்றோரை தப்பவிடுகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.