Home Featured கலையுலகம் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – ஆனந்த் அரவிந்த் வென்றார்!

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – ஆனந்த் அரவிந்த் வென்றார்!

1356
0
SHARE
Ad

Vijay TV-Super Singer 5 - finalistsசென்னை – உலகம் எங்கும் உள்ள தொலைக்காட்சி பாடல் போட்டி இரசிகர்களைக் கடந்த சில மாதங்களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் “சூப்பர் சிங்கர் 5” பாடல் போட்டி நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது.

மலேசிய நேரப்படி, இன்று சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிவரை நீடித்த இந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்த் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நீதிபதிகள் தேர்வுப் படி 715 புள்ளிகள் பெற்று இரண்டாவது நிலையைப் பெற்றாலும், பொதுமக்களின் வாக்குகளையும் சேர்த்து முதலாவதாக ஆனந்த் அரவிந்த் வெற்றி பெற்றார்.

இறுதிச் சுற்றுக்கு முன்பாக, நீதிபதிகளின் தேர்வுப்படி ஆனந்த் முதல் மூன்று போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு பெறாவிட்டாலும், , வைல்ட் கார்ட் எனப்படும் பொதுமக்கள் ஆதரவு வாக்குகளால் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றார்.

#TamilSchoolmychoice

நீதிபதிகள் வாக்குகள் மற்றும் பொதுமக்கள் வாக்குகள் என இரண்டு தரப்பு வாக்குகளையும் சேர்த்து 5 பேர் கொண்ட இறுதிச் சுற்றில் இரண்டாவதாக,  ஃபாரிடா தேர்வு பெற்றார். 10 இலட்சம் ரூபாயை இவர் பரிசாகப் பெற்றார்.

மூன்றாவது வெற்றியாளராக இராஜகணபதி வெற்றி பெற்றார்.

நீதிபதிகளின் தேர்வுப்படி 746 புள்ளிகள் பெற்று முதலாவதாகத் தேர்வு பெற்றவர் இராஜகணபதி என அறிவிக்கப்பட்டது. அதற்காக, அவர் 10 இலட்சம் ரூபாயைப் பரிசாகப் பெற்றார். நீதிபதிகள் புள்ளிகள், பொதுமக்கள் வாக்குகள் இணைந்து மூன்றாவது வெற்றியாளராக இராஜகணபதி வெற்றி பெற்றார்.

நான்காவது இடத்தைப் பிடித்த இலட்சுமி 3 இலட்சம் ரூபாய் பரிசைப் பெற்றார். ஐந்தாவது வெற்றியாளரான சியாத், இரண்டு இலட்சம் ரூபாய் பரிசாகப் பெற்றார்.

வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் மேடையில் இருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆனந்த், ஃபாரிடா இருவருக்கும் தனது அடுத்த படத்தில் தனது இசையமைப்பில் பாடுவதற்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்தார்.

Vijay TV-Super singer 5 - Anan Arvind-

ஆனந்த் அரவிந்த் (கோப்புப் படம்)

Vijay TV-Super Singer 5 - finalist - Farida-

ஃபாரிடா

Vijay TV-Super Singer 5-finalist- Letchumi

இலட்சுமி 

Vijay TV-super-singer 5 - Siyad

சியாத்

Vijay TV-Rajaganapathy-Super-Singer-5-Finalist

இராஜகணபதி

Vijay TV - Super Singer 5 - finalists-

சூப்பர் சிங்கர் – 5வது தொடரின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி பங்கெடுத்த போட்டியாளர்கள் (இடமிருந்து) ஆனந்த் அரவிந்த், சியாத், இராஜகணபதி, ஃபாரிடா (அமர்ந்திருப்பவர்), இலட்சுமி (அமர்ந்திருப்பவர்)…