Home Featured இந்தியா டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வென்றது!

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வென்றது!

990
0
SHARE
Ad

Cricket - ICC-T20-World-Cup-2016மும்பை – இங்கு நேற்றிரவு நடைபெற்ற டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் இறங்கின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில்  20 ஓவர்கள் முடிவடைந்தபோது, தென் ஆப்பிரிக்கா, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ஓட்டங்களை எடுத்திருந்தது. டி-20 விளையாட்டில் இது அதிகமான ஓட்டங்களைக் கொண்ட அதிக பட்சமான இலக்காகும்.

#TamilSchoolmychoice

எனவே, 230 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து, 19.4 ஓவர்கள் முடிவடைந்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து, 230 ஓட்டங்களை எடுத்து அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.