Home Featured இந்தியா டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது!

டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது!

934
0
SHARE
Ad

Cricket T20-World Cup - New Zealand-தரம்சாலா – இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையில் இன்று தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில், நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில், 20 ஓவர்கள் முடிந்தபோது நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து, 142 ஓட்டங்களை எடுத்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சுலபமாக, நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை முறியடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, ஆஸ்திரேலியா, 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

நியூசிலாந்து 8 ஓட்டங்களில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது, அதற்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டிருக்கின்றது.