Home Featured கலையுலகம் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – இன்று இறுதிச் சுற்று!

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – இன்று இறுதிச் சுற்று!

1182
0
SHARE
Ad

Vijay TV-Super Singer 5-Logoசென்னை – உலகம் எங்கும் உள்ள தமிழ் தொலைக்காட்சி இரசிகர்களைக் கவர்ந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 5 – என்ற பாடல் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று இன்று சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

ஃபரிடா,  இராஜகணபதி, சியாத் ஆகிய மூவரும் நீதிபதிகளால் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

பின்னர் ‘வைல்ட் கார்ட்’ எனப்படும் பொதுமக்கள் தேர்வின் மூலம் மேலும் இருவர், இலட்சுமி – ஆனந்த் அரவிந்த் அக்‌ஷன், ஆகிய இருவரும் தேர்வானார்கள்.

இன்றைய இறுதிச் சுற்றுப் போட்டி நேரலையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால், உலகம் எங்கும் உள்ள கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்கள் இதனைப் பார்த்து இரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவிலும், ஆஸ்ட்ரோவில் 224ஆம் எண்கொண்ட, விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகின்றது.