Home Featured நாடு லிம் குவான் எங் இல்லம்: ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார்!

லிம் குவான் எங் இல்லம்: ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார்!

815
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிராக புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையைவிட குறைவான விலையில் அவர் பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100இதற்கு முன் இந்த விவகாரத்தில் செய்யப்பட்டிருந்த புகார், லிம் குவான் எங் ஜாலான் பின்ஹோர்னிலுள்ள அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தது தொடர்பானது என்றும், இன்றைய புகார் அவர் அந்த இல்லத்தை விலைக்கு வாங்கியது தொடர்பானது என்பதால், புதிய விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டிருப்பதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

தங்களிடம் செய்யப்படும் எந்த ஒரு புகாரையும் பாரபட்சமின்றி விசாரிப்பது தங்களின் கடமை என்றும் கூறியுள்ள ஊழல் தடுப்பு ஆணையம், அந்த வகையில் இந்தப் புகாரும் விசாரிக்கப்படும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநிலத்தின் தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷாபுடின் யாஹாயா, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, அரசாங்கத்தின் வரி மற்றும் மதிப்பீட்டு இலாகா, லிம் குவான் வாங்கியுள்ள இல்லம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும், 3 மில்லியன் ரிங்கிட் சந்தை மதிப்புடைய அந்த இல்லம், 2.8 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறினார்.

மேலும், அந்த இல்லம் கூடுதலாக சில மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காவல் துறையில் லிம் குவான் எங்குக்கு எதிராக புகார் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புதிய புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

30 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த இல்லம் வாங்கப்பட்ட விவகாரத்தில் ஊழல் எதுவும் இல்லை என்றும், இல்லத்தின் உரிமையாளரின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த விற்பனை நடந்திருக்கின்றது என்றும் லிம் குவான் எங் விளக்கம் தந்துள்ளார்.