Home Featured தமிழ் நாடு பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார்!

பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார்!

870
0
SHARE
Ad

சென்னை – தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய, நம்பிக்கையான சகா எனக் கருதப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கும், முதல்வருக்கும் இடையில் பிரச்சனை என்றும், பன்னீர் செல்வம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் தகவல் ஊடகங்களில் ஆரூடங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்துள்ளார் பன்னீர் செல்வம்.

Panneer Selvam with Jayalalithaaஅம்மாவுடன் ஓபிஎஸ் (பழைய கோப்புப் படம்)

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் நிதியமைச்சருமான பன்னீர் செல்வத்தின் இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் தகராறு ஏதும் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் வண்ணமும், பன்னீர் செல்வம் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணமும் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.