Home Featured உலகம் உளவாளியின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

உளவாளியின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

622
0
SHARE
Ad

i2பாக்தாத் – உளவாளியின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி, தலையை சிதறடித்துக் கொன்றுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆட்சி செய்து வருகின்றனர்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களுக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக் அரசாங்கத்துக்காக தங்கள் அமைப்பை உளவு பார்த்த 6 பேரை கொலை செய்யும் காணொளி ஒன்றை தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

i4அதில், ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள பலுஜா நகரில்,  பிடிபட்டவர்களில் ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட நீலநிற ஒயரின் மூலம் முடிச்சு போடும் காட்சியும், அதன்பின் குண்டு வெடித்து சிதறியவுடன்,  அந்த உளவாளியின் தலையும் உடலில் இருந்து சிதறித் தெறிக்கும் கோரக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் அந்த காணொளியில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை தலையில் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அத்துடன், தங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை கசியவிட்ட குற்றம், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக அந்த ஆறு பேரையும் கொன்றதாக அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.