Home இயக்கங்கள் கெடா மாநில ஆலய மாநாடு

கெடா மாநில ஆலய மாநாடு

736
0
SHARE
Ad

malaysia-hindhu-sangamசுங்கைப்பட்டாணி, மார்ச்.15- நாளை 16.3.2013 தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய பிரார்த்தனை மண்டபம், ஜாலான் கோலக்கெட்டில், சுங்கைப்பட்டாணியில் மலேசிய இந்து சங்க கெடா மாநிலப் பேரவையின் ஆலய மாநாடு மாநிலத் தலைவர் தொண்டர்மணி எம்.வேலு தலைமையில் நிகழவுள்ளது.

ஒரு தனி மனிதனை நெறிபடுத்தி வாழ்க்கையில் சிறக்க உதவுவது சமயம். எதிர்காலச் சவால்களைக் களைவதற்கும் நமது அடுத்த தலைமுறைக்கு ஆலயத்தின் வழி சமய, பண்பாடு, கலைக் கலாச்சாரத்தினைக் கொண்டு செல்வதற்கும் நமக்கு பெரும் பங்கு உண்டு.

இதனைக் கருத்தில் கொண்டு மலேசிய இந்து சங்கம், ஆலய வழிகாட்டிக் கையேடு ஒன்றினைத் தயார் செய்துள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்கின்ற  ஆலயங்களுக்கு இலவசமாக ஆலய வழிக்காட்டிக் கையேடு வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு ஓர் ஆலயத்தை பிரதிநிதித்து மூன்று பேராளர்கள் கலந்து கொள்வதற்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பாக அழைக்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, மலேசிய இந்து சங்க கெடா மாநிலப் பேரவையின் செயலாளர் கே.எஸ்.மணியம்  019-4566419 மற்றும் மாநில இந்து சங்கத்தின் அலுவலகம் 04-4213380 என்ற தொலைப்பேசி எண்களுடன் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.