Home Featured நாடு அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் – வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் – வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

947
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் எனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

Bar-council-logo-440-X-330“மலேசியாவின் நன்மைக்காகவும், மக்களின் நம்பகத்தன்மை, சட்டத்தைப் பின்பற்றும் நாடு என்ற தோற்றம், குறிப்பாக குற்றவியல் நீதி பரிபாலனத்தை நாட்டில் நிர்வாகம் செய்வது ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக அபாண்டி அலி தனது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது

நஜிப்பின் தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்குகளில் ஏராளமான பணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விவகாரத்தில் அவர் மீது எந்தவித நீதிமன்றக் குற்றச்சாட்டையும் கொண்டுவராத காரணத்தால், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி (படம்) ராஜினாமா செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை மலேசிய வழக்கறிஞர் மன்றம் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

Mohamed Apandi Ali-AGதாபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப் பயணிகளுக்கான நிதி வாரியத்திலிருந்தும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் தனது இயக்குநர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் இதே போன்ற மற்ற நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் போன்றவற்றிலிருந்தும் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் சட்டரீதியாக அவர் வகிக்க வேண்டிய பொறுப்புகளில் மட்டுமே நீடிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் மன்றம் தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

எந்த ஓர் அமைப்பிற்கு எதிராகவும் சட்டரீதியாக வழக்கு தொடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்பதால், அவர் எந்த ஒரு நிறுவனத்திலோ, அமைப்பிலோ இயக்குநராக இருக்கக்கூடாது என்றும் அவ்வாறு இருந்தால் அவரது சுதந்திரத் தன்மை பாதிக்கப்படும் என்றும் வழக்கறிஞர் மன்றத்தின் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அந்த ஆணையமே தகுதியான வேட்பாளர்களை அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக தேர்ந்தெடுத்துப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் மன்றம் முன்மொழிந்துள்ளது.

இதற்கு முன்பாக, அபாண்டி அலி நஜிப்புக்கு ஆதரவாக எடுத்த முடிவுகள் மீது சீராய்வு மனு ஒன்றை வழக்கறிஞர் மன்றம் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.