Home Featured கலையுலகம் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தேறியது!

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தேறியது!

783
0
SHARE
Ad

சென்னை – விஜய் நடிப்பில், அட்லீயின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் கோலாகலமாக அரங்கேறியது.

இந்த வெளியீட்டு விழாவின்போது படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனைவரையும் முதல் ஆளாக நின்று வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பத்துடன் வருகை தந்தார். பின்னர், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை மீனா மற்றும் அவரது மகள் நானிகா ஆகியோரும் வருகை தந்தனர்.

#TamilSchoolmychoice

Vijay-Theri-music launchபிரமுகர்கள் அனைவரும் வந்த பின்னர் உச்ச கட்டமாக நடிகர் விஜய் அரங்கினுள் பலத்த ஆரவாரத்தோடு நுழைந்தார். சாக்லெட் வர்ண சட்டையில் காட்சியளித்தார் விஜய்.

பின்னர் படத்தின் முன்னோட்டமும் (டிரெய்லர்) பாடல்களும் திரையில் காட்டப்பட்டன. ஏற்கனவே படத்தின் பாடல்களின் சில பகுதிகள் யூடியூப் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியம் தொகுத்து வழங்கினார்.

தெறி படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பின் வழி காணொளியில் காணலாம்.