Home Featured கலையுலகம் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் அஜீத் – புதிய கருத்துக் கணிப்பு!

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் அஜீத் – புதிய கருத்துக் கணிப்பு!

769
0
SHARE
Ad

Thala-Ajithசென்னை – தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக் கணிப்பில் 46.88% வாக்குகள் பெற்று அஜீத் முதல் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் சிறந்த நடிகராக அஜீத் தென்னிந்தியா அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி, தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துகணிப்பு பட்டியலில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களின் முன்னணி நாடிகர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.

மேலும், அவர்கள் நடிப்பில் வெளியான படங்களும் இடம்பெற்றன. இதில் தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், அஜீத், விஜய் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவை நேற்று வெளியிட்டது. இதில் சுமார் 46.88% வாக்குகளுடன் தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக அஜீத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேப்போல் 42.58% வாக்குகளுடன் 2-ஆவது இடத்தை பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பெற்றிருக்கிறார்.

மேலும், பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40.01% வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், பிருத்விராஜ் 2.27% வாக்குகளுடன் 4 -வது இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் மம்முட்டி, பிரபாஸ், சுதீப், விக்ரம் போன்ற நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி  அஜீத் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆனால், ரஜினிகாந்த், கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த தல ரசிகர்கள் தற்போது உற்சாக மிகுதியில் திகைத்துள்ளனர்.