Home Featured நாடு கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!

கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!

751
0
SHARE
Ad

heatகோலாலம்பூர் – கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் மாஹ்ட்சிர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், கெடா மற்றும் பெர்லிசில் இன்னும் அதிகமான வெப்பம் நிலவுவதால், அம்மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.