Home Featured உலகம் வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் – மிச்சல் ஒபாமா முடிவு!

வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் – மிச்சல் ஒபாமா முடிவு!

676
0
SHARE
Ad

michelle-obama-concernedapஆஸ்டின்(அமெரிக்கா): ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று மிச்சல் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டு முறைக்கு (மொத்தம் 8 ஆண்டுகள்) மேல் இருக்க முடியாது என்பது விதியாகும்.

இரண்டாவது முறையாக பதவி ஏற்ற அதிபர் ஒபாமா, இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதால் வெள்ளை மாளிகையிலிருந்தும் வெளியேற வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா, முதல் பெண்மணியாக பல்வேறு சமூக நலப்பணித்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் நலன் மீது அதீத ஆர்வம் காட்டி வருகிறார். பில்கிளிண்டனின் மனைவி ஹிலாரிகிளிண்டன் வழியில், மிச்சல் ஒபாமாவும் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஒபாமா போலவே, இலனாய் மாநிலத்திலிருந்து செனட்டர் பதவிக்கு முதலில் போட்டியிடுவார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து அதிபர் வேட்பாளராகவும் களம் காண்பார் என்ற பேச்சும் எழுந்தது. இந்நிலையில், ஆஸ்டின் நகரில் சௌத் ஆஃப் சௌத்வெஸ்ட் விழாவில் பங்கேற்ற மிச்சல் ஒபாமா, தனக்கு மீண்டும் வெள்ளை மாளிகை செல்ல விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

கட்சி சார்ந்த அரசியல் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருந்து சமூகப்பணி ஆற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எட்டாண்டுகளாகத் தனது குழந்தைகள் வெள்ளை மாளிகை வாழ்க்கையில் மிகவும் தனிமைப்பட்டு விட்டனர். இனி அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார். மிச்சல் ஒபாமாவின் இந்த முடிவு நிரந்தரமான ஒன்றா அல்லது குழந்தைகள் பெரியவர்களானதும் அரசியல் பக்கம் வருவாரா என்பது தற்போதைய புதிராகும்.