Home Featured நாடு ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் – நஜிப்...

ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் – நஜிப் அறிவிப்பு!

671
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் எவ்வளவு நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது? என்று நாடாளுமன்றத்தில் இன்று பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் எழுப்பிய கேள்விக்கு, நஜிப் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

“வசூல் செய்யப்பட்ட நிதி, அனைத்து மாநிலங்கள் மற்றும் முகமைகளுக்கு வருடாந்திர பட்ஜட் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, கிராமப்புறங்கள் உட்பட சமூதாயத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும், அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நலனுக்காகப் பயன்படுத்தப்படும்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice