Home Featured உலகம் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

747
0
SHARE
Ad

pope francis in instagramவாடிகன் – டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். இத்தகவலை வாடிகன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதில் தான் பிரார்த்தனை செய்யும் படத்தை பதிவு செய்துள்ளார். அதனுடன் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார்.

அது 9 மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக இயக்குனர் கெவின் சிஸ்ட்ரோம் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.