Home Featured நாடு பக்காத்தான் பேராவை இழந்ததற்குக் காரணம் ஜசெக, பிகேஆர் தான் – ஹாடி குற்றச்சாட்டு!

பக்காத்தான் பேராவை இழந்ததற்குக் காரணம் ஜசெக, பிகேஆர் தான் – ஹாடி குற்றச்சாட்டு!

695
0
SHARE
Ad

Lim Kit Siang-Hadi Awang Comboகோலாலம்பூர் – கடந்த 2009-ம் ஆண்டு பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததற்குக் காரணம் பாஸ் கட்சி அல்ல என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

பேராக் மாநிலத்தை இழந்ததற்குக் காரணம் பிகேஆர் மற்றும் ஜசெக கட்சி தான் என்றும் ஹாடி குற்றம் சாட்டியுள்ளார்.

மூன்றாம் அணியாக உருவெடுத்துள்ள பாஸ் மற்றும் இக்காத்தான் கட்சியை “பூஜ்யத்தோடு பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்” என்று விமர்சித்துள்ள ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் குறித்து ஹாடி அவாங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பாஸ் கட்சி ஒன்றும் பூஜ்யம் அல்ல. கூட்டணியில் புரிந்துணர்வோடு இருந்த போது கிளந்தான், கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றினோம்.”

“பேராக் கவிழ்ந்ததற்குக் காரணம் பாஸ் அல்ல. ஜசெக, பிகேஆர் தான் காரணம். கட்சித் தாவல்களை பாஸ் செய்யவில்லை. அதை செய்தது ஜசெக தான்” என்று மலாய் நாளேடு ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள ஹாடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு, பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சியமைத்த போது, பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜசெக கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்களை சுயேட்சையாக அறிவித்துக் கொண்டு தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்ததால், பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.