கோலாலம்பூர் – மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அவரது குடிநுழைவு ஆவணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தான் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அல்தான்துயாவின் குடிநுழைவு ஆவணங்கள் அழிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்த அரசாங்கம் ஏன் டிசம்பர் 2015 வரையில் கால அவகாசம் எடுத்துக் கொண்டது என்று அலோர் செடார் நாடாளுமன்ற உறுப்பினர் கோய் சியோ லியங் எழுப்பிய கேள்விக்கு சாஹிட் இன்று எழுதுப்பூர்வ பதிலளித்துள்ளார்.
“பயணம் செய்திருப்பதைக் கண்டறிந்துள்ளோம். அதனால் விசாரணைக்காக அந்த ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன”
“எனவே, அந்த ஆவணங்களையும், அதன் விவரங்களையும் இந்த வழக்கு முடியும் வரை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.
அப்படி வெளியிட்டால் இந்த வழக்கிற்கு அவை இடையூறாக இருக்கும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.