Home Featured உலகம் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

1020
0
SHARE
Ad

changi (1)துபாய் – இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் அனைத்துலக அளவில் விமான நிலையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில், சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் முதலிடத்தை பிடித்துள்ளது சிங்கப்பூர் சாங்கி அனைத்துலக விமான நிலையம்.

இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் சியோல் இன்சியோன் அனைத்துலக விமான நிலையமும், மூன்றாவது இடத்தை ஜெர்மனியின் மூனிச் விமான நிலையமும் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

வளைகுடா நாடுகளில் கத்தாரின் தோஹா ஹமத் விமான நிலையம் 10-ஆவது இடத்தையும், துபாய் அனைத்துலக விமான நிலையம் 26-ஆவது இடத்தையும், அபுதாபி விமான நிலையம் 38-ஆவது இடத்தையும், பஹ்ரைன் 44-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் டெல்லி அனைத்துலக விமான நிலையம் 66-ஆவது இடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு 58-ஆவது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு 141-ஆவது இடத்திலிருந்த மும்பை, இந்த ஆண்டு 64-ஆவது இடத்தையும், பெங்களூரு விமான நிலையம் 74-ஆவது இடத்தை பெற்றுள்ளன. ரஷியாவின் கஸன் விமான நிலையம் 100-ஆவது இடத்தை பெற்றுள்ளது.