கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பற்றிய பெரிய இரகசியம் ஒன்றை சரியான நேரம் வரும் போது வெளியிடுவேன் என்று முன்னாள் திரங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் தெரிவித்துள்ளார்.
“அந்த உண்மையான கதையை இப்போது திரெங்கானுவில் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒருவேளை அதை நான் வெளியிட்டால், எல்லோரும் அசிங்கப்படுவார்கள். பிரதமரும் அசிங்கப்படுவார்.” என்று கடந்த மார்ச் 9-ம் தேதி எப்எம்டி இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
அந்த ‘பெரிய இரகசியத்தின்’ காரணமாக தான், திரெங்கானு மக்களைக் காப்பாற்றும் நோக்கில் எல்லாவற்றில் இருந்து வெளியேறியதாகவும் அகமட் சைட் குறிப்பிட்டுள்ளார்.
திரெங்கானு நடப்பு மந்திரி பெசார் அகமட் ரசிப் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக அகமட் சைட் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தால், அந்த மனுவைக் கடந்த மார்ச் 8-ம் தேதி, திரங்கானு சட்டமன்ற சபாநாயகர் மொகமட் சுபீர் எம்போங் நிகாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.