Home Featured தொழில் நுட்பம் புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ – ஐபேட் புரோ அறிமுகம்!

புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ – ஐபேட் புரோ அறிமுகம்!

586
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ – நேற்று குப்பர்ட்டினோவில் உள்ள தனது தலைமையகத்தில் 4 அங்குல குறுக்களவுள்ள சிறியரக ஐபோன் எஸ்இ மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஐபேட் புரோ என்ற தட்டைக் கணினிகள் எனப்படும் ஐபேட்-சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.

உலகம் எங்கும் நேரலையாக இந்த கருவிகளின் அறிமுகம் இணையம் மற்றும் கைத்தொலைபேசிகளின் வழி நடைபெற்றது.

Apple-iPhone SE

#TamilSchoolmychoice

புதிய ரக ஐபோன் எஸ்இ – 4 அங்குல குறுக்களவு திரை கொண்டது….

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபேட் ஏர் 2 மற்றும் ஐபேட் புரோ இரண்டையும் இணைத்து, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த 9.7 அங்குல குறுக்களவு திரை கொண்ட ஐபேட்-தட்டைக் கணினியும் நேற்று வெளியிடப்பட்டது.

Apple-iPad Pro

புதிய ஐபேட் புரோ இதுதான்…..

சிறிய அளவிலான – ஆனால் கணினிக்கு நிகரான சக்திவாய்ந்த கருவியாக இந்த புதிய ஐபேட் புரோ திகழ்கின்றது. 9.7 அங்குல குறுக்களவு திரை, மற்றும் அதைவிட பெரியதாக 12.9 அங்குல குறுக்களவு திரை ஆகிய வடிவங்களில் இவை கிடைக்கும்.

(மேலும் செய்திகள் தொடரும்)