Home Featured இந்தியா மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி! (காணொளியுடன்)

மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி! (காணொளியுடன்)

645
0
SHARE
Ad

Elephant_attacks_m_2753730nபர்த்வான் – மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கஷ்பூரில் நேற்று காலை வயல்வெளியில் 2 விவசாயிகள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 யானைகள் ஒரு கும்பலாக அங்கு வந்தன. வயல் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் துரத்தின.

இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். அனில் பக்தி (வயது 64) என்பவர் மட்டும் யானைகளிடம் சிக்கிக் கொண்டார். அவரை ஒரு யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் மிதித்து கொன்றது. அதன்பிறகும் யானைகளின் வெறியாட்டம் தணியவில்லை.

ஆவேசமாக பிளிறிக் கொண்டே அந்த பகுதியை சுற்றி வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதிக்கு உள்ளாயினர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வன இலாகாவினர் யானைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி அனில் பக்தியை யானை மிதித்துக் கொன்ற காணொளி காட்சி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, மந்தேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேரை கொன்ற இதே யானைகள் கூட்டத்தின் மீது நேற்று முன்தினம் இரவு வனஇலாகாவினர் மயக்க ஊசிகளால் சுட்டனர். அந்த 5 யானைகளில் ஒன்று நேற்று காலையில் கஷ்பூரில் நடத்திய வெறியாட்டத்துக்கு பின்பு மயங்கி விழுந்து இறந்து போனது.