Home Featured நாடு 20,000 ரிங்கிட் நன்கொடை என்னை அமைதிப்படுத்திவிடாது – பாலா மனைவி கூறுகின்றார்!

20,000 ரிங்கிட் நன்கொடை என்னை அமைதிப்படுத்திவிடாது – பாலா மனைவி கூறுகின்றார்!

937
0
SHARE
Ad

Selviரவாங் – பாரிசான் ஆதரவு அரசு சாரா இயக்கத்திடமிருந்து தனது பிள்ளைகளின் கல்விக்காக 21,050 ரிங்கிட் நன்கொடை பெற்றுள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி, இந்த நிதியுதவி தன்னை அமைதிபடுத்திவிடாது என்று தெரிவித்துள்ளார்.

பிஎம்எஸ்பி (Persatuan Minda dan Sosial Prihatin) என்ற அரசு சாரா இயக்கத்திடமிருந்து அந்த நன்கொடையைப் பெற்ற பின்னர், ரவாங்கிலுள்ள தனது இல்லத்தில் இருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள செந்தமிழ்ச் செல்வி, தனது பிள்ளைகளின் கல்விக்காக தான் அந்த என்ஜிஓ-வை நாடியதாகத் தெரிவித்துள்ளார்.

“இல்லை.. இல்லை .. இல்லை.. என்னுடைய குழந்தைகளின் கல்விக்காக தான் இந்த உதவி. என்னை அமைதியாக்க இந்த 20,000 ரிங்கிட் போதுமென்று நினைக்கிறீர்களா? இது போதுமா? நான் உங்களிடம் கேட்கிறேன்?”

#TamilSchoolmychoice

“இது போதாது. இது என்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவிற்காகத் தான்” என்று கண்ணீரோடு செல்வி தெரிவித்துள்ளதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் மற்றும் இன்னும் 7 பேருக்கு எதிராக தான் தொடுத்த வழக்கில், தனது முன்னாள் சட்ட ஆலோசகரான அமெரிக் சித்து  அந்த வழக்கில் இருந்து வாபஸ் பெற்றவுடன் தானும் வாபஸ் பெறுவேன் என்றும் செந்தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.