கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கடந்த வாரம் தான் பிரசல்ஸ் நகரில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவரலாம்.
அமெரிக்கன் ஏர்லைன் பிரிவில் முதல் குண்டு
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிவு மேசை (check-in desk) அருகே தான் முதல் குண்டு வெடித்ததாக பிரசல்ஸ் விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக, பயணிகள் நுழைவு வாயிலில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.
முதல் குண்டு வெடிப்பதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவன், பின்னர் அராப் மொழியில் எதையோ உரக்க கத்திவிட்டு குண்டை வெடிக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மெட்ரோ இரயில் நிலையத்தில் மூன்றாவது குண்டு
விமான நிலையத்தில் குண்டு வெடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைநகரின் மெட்ரோ இரயில் நிலையத்தில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது பெல்ஜியன் ஊடகம் கூறுகின்றது.