Home Featured நாடு எம்எச்17: பலியான மலேசியர்களின் குடும்பத்திற்கு தலா 20,000 ரிங்கிட் – அரசு அறிவிப்பு!

எம்எச்17: பலியான மலேசியர்களின் குடும்பத்திற்கு தலா 20,000 ரிங்கிட் – அரசு அறிவிப்பு!

665
0
SHARE
Ad

mh17பாங்கி – கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-ல் உயிரிழந்த மலேசியப் பயணிகளின் குடும்பத்தினருக்கும், மலேசியப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தலா 20,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த உதவித்தொகையைக் கடந்த மார்ச் 18-ம் தேதி அமைச்சரவை அங்கீகரித்ததாக மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் இன்று அறிவித்தார்.

சிறப்பு நினைவு அஞ்சலிக் கூட்டம் ஒன்றை அமைச்சரவை ஏற்பாடு செய்து அதில் இந்த உதவித் தொகையை பயணிகளின் உறவினர்களிடம் வழங்கும் என்றும் ரோஹானி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பலியான மலேசியப் பயணிகளில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என்றும் ரோஹானி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு, ஜூலை 17-ம் தேதி, 283 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் ஆம்ஸ்டெர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, கிழக்கு உக்ரைன் அருகே ஏவுகணை மூலமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தப் பேரிடரில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர். அவர்களில் 44 பேர் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.