Home Featured உலகம் பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பலர் காயம்!

பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பலர் காயம்!

526
0
SHARE
Ad

Belgiumபுரூசெல்ஸ் – பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சிலுள்ள ஜாவெந்தம் விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இரண்டு மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த வெடி சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியான தகவல் வெளிவராத நிலையில், விமான நிலையத்தில் இருந்த பொதுமக்களில் பலர் காயமடைந்திருப்பதாகவும், மீட்புக் குழுவினர் அங்கு துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மேலும், விமான நிலையத்தில் புகைமூட்டமாகவும், அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice