Home Featured நாடு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு 100 மில்லியன் ஊழல்: இருவர் கைது!

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு 100 மில்லியன் ஊழல்: இருவர் கைது!

614
0
SHARE
Ad

MACCபுத்ரா ஜெயா – இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சில் 100 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயத் துறை அமைச்சின் ஊழியர் ஒருவர், தனியார் நிறுவன இயக்குநர் ஒருவர் என கைது செய்யப்பட்டுள்ள அந்த இருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக ஆணையத்தின் புலனாய்வு இயக்குநர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

41 வயதான விவசாயத்துறை அதிகாரி இதற்கு முன்னர் விளையாட்டுத் துறை அமைச்சில் பணிபுரிந்ததாகவும், ஒரு மாதத்துக்கு முன்பாகத்தான், விவசாயத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டதாகவும் அசாம் பாக்கி மேலும் தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்கு அந்த இருவரும் தடுத்து வைக்கப்படுவர் என்றும் தேவைப்பட்டால் மேலும் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஊழல் விவகாரம் தொடர்பில், அந்த அமைச்சின் செயலாளர் உட்பட, 9 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது.