Home Featured நாடு நஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா!

நஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா!

1064
0
SHARE
Ad

fakecoversகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்த பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா நேற்று கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

“பிரதமர் நஜிப் ராக் மீண்டும் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றிருக்கிறார்! ஆனால் தவறான ஒரு விசயத்திற்காக என்பது தான் சோகம். இது ஒரு தீவிரமான தலைப்பு, தரம் அல்லது அவரை நேடியாக குற்றம்சாட்டுகிறது. டைம் இதழின் மீதும் வழக்குத் தொடர்வேன் என்று இனி அவர் சொல்வாரோ?” என்று சிவராசா அந்தப் போலியான அட்டைப் படத்தைத் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

போலியாகத் தயாரிக்கப்பட்டிருந்த அந்த டைம் வார இதழ் அட்டைப் படத்தில், ஊழலில் நஜிப் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, தனது தவறை உணர்ந்த சிவராசா, அந்தப் படம் போலி என்பது தனக்குத் தெரியாது என்றும், தனது பதிவை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.