இன்று தொகுதி பேச்சிவார்த்தை மற்றும் பங்கீடு குறித்து திமுக தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீனும் கலந்தாலோசித்தனர். இந்நிலையில் பேச்சு வார்த்தைக்குப் பின் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்த ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர். பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.