Home Featured கலையுலகம் சூர்யாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்! (காணொளியுடன்)

சூர்யாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்! (காணொளியுடன்)

646
0
SHARE
Ad

suryaசென்னை – தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 100 சதவீத ஓட்டு பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

சினிமா நடிகர், நடிகைகள் பங்குபெறும் தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய குறும்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குறும்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்த பிரச்சார படம் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும் ‘யூடியூப்’ வலைதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. இளைஞர்கள் தங்கள் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்து 100 சதவீத வாக்குப்பதிவுக்கு உதவ வேண்டும் என்று சூர்யா அதில் தெரிவித்துள்ளது இளம் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. ஏராளமானோர் இதை பதிவிறக்கம் செய்து பார்த்து உள்ளனர்.

#TamilSchoolmychoice