இந்த சம்பவத்தையடுத்து பிரசல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் பிரசல்ஸில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் நேற்று இரவு ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரசல்ஸில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று வியாழக்கிழமை ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கிருந்த 28 சிப்பந்திகள் உள்பட 242 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு கிளம்பியது. அந்த விமானம் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.