Home Featured வணிகம் ஏர் இந்தியாவின் 49% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்!

ஏர் இந்தியாவின் 49% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்!

650
0
SHARE
Ad
KONICA MINOLTA DIGITAL CAMERA
KONICA MINOLTA DIGITAL CAMERA

புதுடெல்லி – ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு லாபம் ஈட்டியது.

சமீப காலங்களில் போட்டி அதிகரித்து வருவதால் தனது சந்தையை தனியார் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா இழந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த நிதி ஆண்டின் வருவாய் இலக்கை எட்டுவதற்கு இந்த பங்கு விலக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து 5 நபர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த குழுவில் நிதி அமைச்சகம், விமானபோக்குவரத்து துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் என ஐந்து நபர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice