Home Featured இந்தியா டி20 உலககோப்பை: பாகிஸ்தானை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!

டி20 உலககோப்பை: பாகிஸ்தானை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!

600
0
SHARE
Ad

t20 ausமொகாலி – ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று 2-ஆவது பிரிவில், பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.

மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதின. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

அடுத்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 4 ஓவரில் 27 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றிய பாக்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

#TamilSchoolmychoice

சூப்பர் 10 சுற்று 2-ஆவது பிரிவில் நியூசிலாந்து அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன.