இது குறித்து அவர் நேற்று மாலை மலேசியாகினிக்கு அளித்துள்ள தகவலில், “காலை 11.30 மணியளவில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்யத் தொடங்கினர். இப்போது தான் வெளியே அனுப்பப்பட்டேன் (டாங்கி வாங்கி காவல்துறைத் தலைமையகத்திலிருந்து). ஒருநாள் முழுவதும் என்னை இருக்க வைத்துவிட்டார்கள். மாலை 5.15 மணியளவில் தான் வெளியே வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் கீழ் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகின்றது.
Comments