Home Featured தமிழ் நாடு வைகோ மன்னிப்புக் கேட்க கோரி மு.க. ஸ்டாலின் மனு!

வைகோ மன்னிப்புக் கேட்க கோரி மு.க. ஸ்டாலின் மனு!

638
0
SHARE
Ad

stalin-vaiko-600சென்னை – திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி கடாவாக்கப்பட்டார்.

இதில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் கருணாநிதி குடும்பத்தில் பதுங்கிக்கொண்டார்கள். சாகித் பால்வா (ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர்) சென்னை வந்து மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு காசோலை கொடுக்கப்பட்டது என்கிறார்களே அது யாரிடம் கொடுக்கப்பட்டது.

ஷாகித் பாவ்லா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்னார் என்பதாலேயே பெரம்பலூர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 2ஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது என நான் சொல்கிறேன். இதற்கும் ஒரு வழக்கை போட்டுக்கொள்ளட்டும். அந்த வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கேன் என்று வைகோ கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

காலையில் வைகோ பேட்டி அளித்த நிலையில், மாலையில் ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீங்கள் என் கட்சிக்காரின் மான்பை குறைக்கும் வகையில் பேசியுள்ளீர்கள்.

இந்த மனு பெற்றுக் கொண்ட 3 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேனில் உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, தொடர்ந்து திமுக மீது அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக வைகோ மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.