Home Featured இந்தியா டி20 உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்!

622
0
SHARE
Ad

afghanistanநாக்பூர் – ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நேற்று நாக்பூர் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்றில் ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

#TamilSchoolmychoice

ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற ஆப்கானிஸ்தான் அணி கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய பெருமையுடன் தாயகம் திரும்புகிறது.