கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங் எழுப்பிய துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் சாஹிட், “இதுவரை, 12,917 பேருக்கு பிஸ்டல் (கைத்துப்பாக்கி) வைத்திருப்பதற்கும், 1,789 பேருக்கு ரிவால்வர்களும் (சுழல் துப்பாக்கி) மற்றும் 2,243 பேருக்கு ரைபில் (பெரிய வகை துப்பாக்கி) வைத்திருப்பதற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்பான்மையாக 63,145 பேருக்கு ஷாட்கன்ஸ் (வேட்டைத் துப்பாக்கிகள்) உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும், 7,731 பேருக்கு பம்ப்கன் (Pumpgun) வகைத் துப்பாக்கிகளுக்கான உரிமமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, 1,946 பேருக்கு மற்ற வகை ஆயுதங்களுக்கான (Flag off pistols, blank guns, spearguns, nailguns and stun guns) உரிமம் வழங்கப்பட்டிருக்கும் தகவலையும் சாஹிட் வெளியிட்டுள்ளார்.