Home Featured கலையுலகம் தேசிய விருது வென்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தேசிய விருது வென்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

663
0
SHARE
Ad

ilayarajaசென்னை – சிறந்த திரைப்படங்களுக்கான 63-ஆவது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் தேர்வாகியுள்ளது.

மேலும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தேர்வாகியுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தேசிய விருது வாங்கியுள்ள விசாரணை படத்துக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த ரஜினியை சந்தித்த நிருபர்களிடம், தேசிய விருது வாங்கிய விசாரணை படத்துக்கும், இளையராஜாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். மேலும், தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.