புதுடெல்லி – குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் 5 பேருக்கு பத்மவிபூஷன் விருதும், 8 பேருக்கு பத்மபூஷன் விருதும், 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
திருபாய் அம்பானிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. திருபாய் அம்பானி சார்பில் கோகிலா அம்பானி பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அஜய் பால் சிங், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கரு, இசைக்கலைஞர் பண்டிட் துளசிதாஸ் பார்க்கரு, மற்றும் மருத்துவ நிபுணர் பிரவீண் சந்திராவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும் அஜாய்குமார் தத்தா, டாக்டர் அல்லா கோபால கிருஷண கோகலே, ஓவியர் கலால் லக்மா கவுடு, கண்சிகிச்சை நிபுணர் மகிபதி ஜோஷி, தாமல் கண்டலை சீனிவாசன், அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகாந்த், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சிவ்நாராயணன் குரீல், ஸ்ரீநரேஷ் சந்தர் லாலு, இலக்கிய துறையில் சிறந்த சேவை ஆற்றிய மாலிக், கிருஷ்ணமணி, மகேஷ் சந்திர மேத்தா ஆகியோருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ வருதுகளை வழங்கினார்.